கோபாலசமுத்திரம் பேருராட்சியில் வெற்றி சுயே. வேட்பாளர் பட்டாசு வெடித்ததில் அரசு பஸ் கண்ணாடி உடைந்து சேதம்

பேட்டை :  நெல்லை அருகே கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர், இங்குள்ள பஜாரில் மக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடினார். அப்போது பட்டாசு வெடித்துச் சிதறியதில் அவ்வழியாக வந்த அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து ேசதமடைந்தது.

இருப்பினும் பஸ்சில் பயணித்தோர் எவ்வித காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: