ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருமலை :  ஸ்ரீநிவாச மங்காபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர  பிரமோற்சவம் நேற்று காலை வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்க மீன லக்னத்தில் கொடியேற்றப்பட்டது. கோவிட்19 விதிகளின்படி பக்தர்கள் இல்லாமல் தனிமையில் நடத்தப்பட்டது.முதலில் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, அனந்த, கருடன், விஷ்வக்சேனர் ஆகியோர் கொடிமரத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். கொடிமரத்திற்கு வேத மந்திரங்களுடன் பூஜை செய்யப்பட்டு மீன லக்னத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வரசுவாமி பிரமோற்சவ கொடியேற்றப்பட்டது.

இதில் பங்கேற்று பேசிய இணை செயல் அதிகாரி வீரபிரம்மன் கோவிட் பரவல் காரணமாக ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் பிரமோற்சவத்தில் பக்தர்கள் இல்லாமல் வீதி உலா ரத்து செய்யப்பட உள்ளது. ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி 24ம் தேதி கருட சேவையும், 28ம் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவடையும்.

இந்த பிரமோற்சவத்தையொட்டி, ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் 9 நாட்கள் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

தினமும் 5 ஆயிரம் வீதம் பக்தர்களுக்கு லட்டுகள் விற்பனை செய்யப்படும் என அவர் தெரிவித்தார். இதில் துணை செயல் அதிகாரி சாந்தி, வைகானச ஆகம ஆலோசகர்  விஷ்ணு பட்டாச்சார்யா, கூடுதல் சுகாதார அலுவலர்  சுனில், விஜி.ஓ.மனோகர், உதவி செயலதிகாரி குருமூர்த்தி, கண்காணிப்பாளர்  செங்கல்ராயுலு மற்றும் கோயில் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.

Related Stories: