சரியான விலை போகாததால் விரக்தி வெண்டைக்காயை ரோட்டில் கொட்டினார் உசிலை விவசாயி

உசிலம்பட்டி : சரியான விலை கிடைக்காததால் விவசாயி வெண்டைக்காயை ரோட்டில் கொட்டிவிட்டு சென்ற சம்பவம் உசிலம்பட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நல்லிவீரன்பட்டியை சேர்ந்த விவசாயி தனசேகரன். இவரது நிலத்தில் வெண்டைக்காய் பயிரிட்டிருந்தார். நேற்று வெண்டைக்காய் கிலோ ரூ.5க்கு மட்டுமே விலை போனது. இதனால் விரக்தியடைந்த தனசேகரன் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நடுரோட்டில் வெண்டைக்காயை மூட்டையுடன் கொட்டிவிட்டு சென்றார்.

 இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் சாலை விபத்து ஏற்படும் என்பதால் சாலையில் கொட்டி உள்ள வெண்டைக்காயை அப்புறப்படுத்தினர்.விவசாயி தனசேகரன் கூறுகையில், ‘‘5 ரூபாய்க்கு வெண்டைக்காயை வாங்குவதால் எந்த லாபமும் இல்லை. வெண்டைக்காய் பிடுங்கும் கூலி, வண்டி வாடகையைகூட கொடுக்க முடியவில்லை. ஆனால் எங்களிடம் 5 ரூபாய்க்கு வாங்கி வியாபாரிகள் 40 ரூபாயில் இருந்து 50 ரூபாய்க்கு விற்கிறார்கள். விவசாயிகளுக்கு இந்த விலை கட்டுபடி ஆகவில்லை. அரசாங்கம் தலையிட்டு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: