மிகப்பெரிய வெற்றி பாமகவுக்கு கிடைக்கும்: ராமதாஸ்

திண்டிவனம்: திண்டிவனம் ரொட்டிக்கார தெருவில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், பாமக நிறுவனர் ராமதாஸ், தனது துணைவியார் சரஸ்வதியுடன் வந்து வாக்களித்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ராஜிவ் காந்தியால் 1988-89ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை.  பின்னர் நரசிம்மராவ் ஆட்சியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில் இரண்டு அமைப்புகள் உள்ளது. 11வது அட்டவணை அரசியல் அமைப்பாகவும், 12வது அட்டவணை நகர்பாலிகாவாகவும் உள்ளது. இந்த இரு சட்டங்களும் உள்ளாட்சியில் மிக மிக முக்கியமானது.

இதன்படி கிராமம், நகரம், பேரூர் மற்றும் மாநகரம் ஆகியவற்றில் வாழும் மக்கள் அவர்களே தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அதன்மூலம் மக்களை ஆட்சி செய்வது. ராஜிவ்காந்தியால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தின் நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை. பஞ்சாயத்து நகர மன்றங்கள் அடிதடி சண்டை மற்றும் கைகலப்பு மன்றமாக மாறி உள்ளது. ஆரோக்கியமான விவாதங்கள் எதுவும் இல்லை இந்த சட்டத்தில் 18 அதிகாரங்கள் உள்ளது. அதன்படி சாலை, குடிநீர் வசதி, நகர மேம்பாடு உட்பட எதுவும் இதுவரை இயங்கவில்லை. உள்ளாட்சிக்கு உரிய நிதியும் வழங்கப்படுவதில்லை. இந்த தேர்தலில் பாமக மிகப்பெரிய வெற்றியை பெறும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories: