கார் ஏற்றி விவசாயிகள் கொலை ஆசிஷ் ஜாமீனை ரத்து செய்யும்படி ரிட் மனு

புதுடெல்லி: ஒன்றிய அரசால் கடந்த 2020ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கீம்பூர் கேரியில் கடந்தாண்டு போராட்டம் நடந்தது. அப்போது, விவசாயிகள் மீது திடீரென மோதிய காரால் 4 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு கடந்த வாரம் அலகாபத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 2 வழக்கறிஞர்கள் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘விவசாயிகளை கொன்ற சம்பவத்தில் ஆசிஷ் மிஸ்ரா மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் ஆதாரம் உள்ளது. அவர் ஜாமீனில் வெளியில் இருந்தால் ஆதாரங்களை அழித்து விடுவார். அரசியல் அதிகாரம் உள்ளதால் வழக்கையும் தவறான பாதைக்கு எடுத்து செல்வார். அதனால், அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்,‘ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: