திருச்சியில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று திருப்பி ஒப்படைப்பு

திருச்சி: திருச்சியில் ஊரடங்கு காலத்தில் சுற்றித்திரிந்தவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் இன்று திருப்பி ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தளர்வுகளற்ற ஊரடங்கின் போது திருச்சியில் கடந்த 15ஆம் தேதி முதல் கடந்த 6ஆம் தேதி வரை 6,610 இருசக்கர வாகனங்கள், 188 மூன்று சக்கர வாகனங்கள், 73 கார்கள் மொத்தம் 6,871 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருச்சி, கே.கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
வாகன உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை காட்டி வாகனங்களை பெற்று செல்கின்றனர். வாகனங்களை பெற வருவோரிடம் காரணமின்றி வெளியே சுற்றித்திரிய வேண்டாம் என்ற அறிவுரையுடன் வாகனங்களை திருப்பி ஒப்படைத்து வருகின்றனர்.
குறைந்தபட்சம் 15 நாட்க ளுக்கு முன்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை இன்று முதல் தேதி வாரியாக தினந்தோறும் தகுந்த நேர இடைவெளியில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250 வாகனங்கள் வீதம் விடுவிக்கப்பட்டு வருகினறன. இதனை கண்காணிக்க சுழற்சி முறையில் இரண்டு காவல் உதவு ஆணையாளர்கள் தலைமையில் 2 ஆய்வாளர்கள் மற்றும் 4 உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் பணியில் உள்ளனர்….

The post திருச்சியில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று திருப்பி ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: