வேலூரில் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய பாஜ தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் விரட்டியடிப்பு: போலீசார் பத்திரமாக மீட்டு சென்றனர்

வேலூர்: வேலூரில் பாஜ வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளரை விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாநகராட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 36வது வார்டில் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பாஜ தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் நேற்று காலை 4 இடங்களில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி முதலில் சார்பனாமேடு பகுதிக்கு சென்ற அவர், துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள், இவரது பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை விரட்டினர். தொடர்ந்து பிடிசி சாலைக்கு சென்ற அவர் அங்கு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ‘‘நீங்கள் இங்கு பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது’’ என கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை விரட்டினர். ஆனாலும் அப்பகுதியில் தொடர்ந்து பிரசாரம் செய்ய முயன்றார். அப்போது அவரை கண்டித்து பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளாமல் திரும்பி சென்றார். அவரை போலீசார் மீட்டு சென்றனர்.

Related Stories: