கள்ளக்குறிச்சியில் மத்திய பயங்கரவாத அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக பெருந்திறள் ஆர்ப்பாட்டம்.!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வரக்கூடாது என காரணத்தை சொல்லி இஸ்லாமிய பெண்களின் கல்வியை பறிக்கும் மத்திய பயங்கரவாத அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக பெருந்திறள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு வகுப்புகளுக்கு வரக்கூடாது எனும் காரணத்தை சொல்லி இஸ்லாமிய பெண்களின் கல்வியை பறிக்கும் பாசிச பயங்கரவாத அரசை கண்டித்து மாவட்ட தலைவர் சாதிக் பாஷா தலைமையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத அடையாளங்களை அணிந்து கொண்டு வரக்கூடாது எனும் காரணத்தை சொல்லி இஸ்லாமிய பெண்கள் வகுப்புகளுக்கு வராமல் தடுக்கும் மதவாதிகளே ஆதரிக்கும் பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

அதேபோல் மதம் சார்ந்த பொட்டு, விபூதி, ருத்ராட்சை,சிலுவை, காப்பு போன்ற பிற அடையாளங்களை கொண்டு பிற மத மாணவ மாணவிகள் பள்ளிக்கு வரும் நிலையில் இஸ்லாமிய பெண்களை மட்டும் ஹிஜாப் அணிந்து வர கூடாது என சொல்லுவது கண்டனத்துக்குரியது என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட பெண்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: