ஹாலிவுட் நடிகர் பாப் சகெட் மர்ம சாவு

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் காமெடி நடிகர் பாப் சகெட், ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஹாஃப் பேக்ட், டம்ப் அண்ட் டம்பரர், நியூயார்க் மினிட், ஐஅம் கிரிஸ் ஃபேர்லெ, எ ஸ்டெண்ட் அப் கய், பெஞ்சமின் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் பாப் சகெட். இவர் புளோரிடாவிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சில நாட்களாக தங்கியிருந்தார். கடந்த பிப்ரவரி 9ம் தேதி அவரது அறை வெகுநேரமாக மூடி இறந்தது. இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் அறை கதவை திறந்து பார்த்தபோது, மர்மமான முறையில் பாப் சகெட் இறந்துகிடந்தார்.

போலீஸ் விசாரணையில் அவர் போதை மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை என்பது தெரிந்தது. பாப் சகெட்டின் குடும்பத்தார் கூறும்போது, ‘பாப் சகெட் பாத்ரூமில் தவறி விழுந்து தலையில் அடிபட்டதாக போனில் கூறினார். பின்னர் அவர் பெட்டில் படுத்துக்கொண்டார். தலையில் பட்ட காயம் காரணமாகவே அவர் இறந்துள்ளார்’ என்றனர்.

Related Stories: