தமிழர் தொன்மையை பறைசாற்றும் கீழடி, கொந்தகை உள்ளிட்ட இடங்களில் 8ம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தமிழர் தொன்மையை பறைசாற்றும் கீழடி, கொந்தகை உள்ளிட்ட இடங்களில் 8ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேட்டில் 2ம் கட்ட அகழாய்வு பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கீழடியில் வீரணன் என்பவருக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளன.

Related Stories: