நியூயார்க்: கோழி முட்டையில் இருந்து மிக மலிவான முறையில் புதிய ரக கொரோனா தடுப்பூசி ஒன்றை நியூயார்க் நகரில் உள்ள ஐச்சன் மவுன்ட் சினாய் மருத்துவக் கல்லூரியில் சர்வதேச விஞ்ஞானிகள் குழு உருவாகியுள்ளது. பிரேசில், வியட்நாம், தாய்லாந்த் போன்ற நாடுகளில் Flu காய்ச்சலுக்கான தடுப்பூசி, கோழி முட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதே பாணியில், கொரோனா வைரஸூக்கு எதிராக ஒரு புதிய தடுப்பூசி ஒன்றை, அமெரிக்காவின் ஐச்சன் மவுன்ட் சினாய் மருத்துவ கல்லூரி ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.