நீட் தேர்வு குறித்து அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்கிறார்: மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றச்சாட்டு

சென்னை: நீட் விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்து வருவதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டி உள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நீட் தேர்வு காரணமாக தமிழ்நாட்டில் 17 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று வேதனை தெரிவித்தார். நீட் பயிற்சி மையங்களுக்கு பாஜக ஆதரவாக இருக்கிறதா? எனவும், பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளதா? எனவும் கேள்வி எழுப்பினார். பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வால் தான் மருத்துவக் கல்லூரிக்கு செல்வதாக அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்கிறார் என்றும் துரை வைகோ குற்றம் சாட்டினார்.

மாணவி லாவண்யா  தற்கொலை பற்றியும் நீட் விவரம் பற்றியும் பேசுவது எல்லாம் முற்றிலும் தவறானது. மாணவர்கள் தொடர்ந்து நீட் தேர்வு எழுதினாலும் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் அதிர்ச்சியில் விரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இருளர் மக்களின் பிள்ளைகள் நீட் தேர்வால் தான் இன்று மருத்துவ கல்லூரிக்கு செல்கின்றார்கள் என்ற பிம்பத்தை அண்ணாமலை ஏற்படுத்தி வருகிறார் என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது பொது மக்களின் விருப்பம் மாநில அரசின் உரிமை இதற்கு ஆளுநர் குடியரசுத் தலைவர் தடை விதிக்கக் கூடாது என கூறிய அவர், வலதுசாரி அரசியல் என்றாலே பொய் பிரச்சாரம் தான் தமிழ் தேசியமும் ஒரு வகை  வலதுசாரி அரசியல் தான் என தெரிவித்தார்.

Related Stories: