தென்கொரியா: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவன கார்களின் கரிம உமிழ்வு குறித்து தவறாக விளம்பரப்படுத்தியதற்காக அந்நிறுவனத்திற்கு தென்கொரிய அரசு 126 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனம் இந்தியாவில் 25 கார்களை விற்பனை செய்கிறது. ஜெர்மன் நாட்டு சொகுசு கார் நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் தென்கொரியாவில் உள்ள அதன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள 15 டீசல் கார் மாடல்களின் கரிம உமிழ்வை குறைத்து கணக்கிடும் வகையில் அந்த வாகனங்களில் மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதாக அந்நாட்டு வர்த்தக ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
