பாஜ அரசில் நல்ல நாட்களை கண்டுபிடிப்பது கடினம்: ராகுல் டிவிட்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வேலையின்மை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை அடிக்கடி விமர்சித்து வருகிறார். கடந்த 2021ம் நிதியாண்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் லாபம் 66 சதவீதம் குறைந்துள்ளது. 50 சதவீத சிறு, குறு மற்றும் நடுத்த நிறுவனங்களின் வருமானமானது 25 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனை மேற்கோள்காட்டி ராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘தொழில் செய்வது ரொம்ப சிரமம். வேலையில்லா இளைஞர்களின் வலி, மோடி அரசின் அப்பட்டமான பொய்கள், நல்ல நாட்களை கண்டுபிடிப்பது கடினம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: