5 ஜி நெட்வொர்க் வழக்கில் அபராதம் நடிகை ஜூகி சாவ்லாவுக்கு எதிரான மனு வாபஸ்: டெல்லி சட்டசேவைகள் ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி: நடிகை ஜூகி சாவ்லாவிடம் இருந்து அபராத தொகையை வசூலித்து தருமாறு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாக டெல்லி உயர் உயர்நீதிமன்றத்தில் சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 5ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படுவதை எதிர்த்து பிரபல இந்தி நடிகை ஜூகிசாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டதாக கூறி, அவர்களுக்கு உயர் நீதிமன்றம் ரூ.20 லட்சம் அபராதம் விதித்தது. இந்தநிலையில், அபராதத்தொகையை ரத்து செய்யக்கோரி ஜூகி சாவ்லா உள்ளிட்ட 3 பேரும் மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதை நீதிமன்றம் ஏற்கவில்லை.  இதையடுத்து அபராத தொகையை வசூலித்து தரும்படி டெல்லி சட்டசேவைகள் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜூகிசாவ்லாவின் அபராத தொகையை ரூ.2 லட்சமாக குறைத்தார்.   இந்தநிலையில் ஜூகிசாவ்லாவிடம் இருந்து அபராத தொகையை வசூலித்து தரும்படி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறுவதாக டெல்லி சட்டசேவைகள் ஆணையம் நேற்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.  இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்தார்.

Related Stories: