நீட் மார்க் அடிப்படையில் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் முன்னுரிமை: மாணவி வலியுறுத்தல்

சென்னை, பிப்.3: மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி கவிப்பிரியா லட்சுமி கூறியதாவது: நான் கடந்த 2021ம் ஆண்டு நீட் தேர்வு எழுதி 475 மதிப்பெண் எடுத்தேன். ஆனாலும் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அப்பா கூலி தொழிலாளி என்பதால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்க இயலவில்லை. நீட் தேர்வில் 475 மதிப்பெண் மற்றும் ஜேஇஇ தேர்வில் 85% மதிப்பெண் பெற்ற என்னால் கால்நடை மருத்துவ படிப்புகளிலும் சேர முடியவில்லை. கால்நடை மருத்துவம், பாராமெடிக்கல் மற்றும் விவசாய கல்லூரி ஆகியவற்றிற்கு நீட் மதிப்பெண் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மற்ற மாநிலங்களில் நீட் மதிப்பெண்களை தகுதியாக வைத்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக தான் நீட் ரிப்பீட்டர்ஸ் தற்கொலை செய்து கொள்கின்றனர். நான் பிளஸ் 2 முடித்து 3 ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். எனவே நீட் ரிப்பீட்டர்ஸ் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, நீட் மற்றும் ஜேஇஇ மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, கால்நடை மருத்துவப் படிப்பு, பாராமெடிக்கல் மற்றும் விவசாய கல்லூரிகளில் முன்னுரிமை அளித்து சீட் கொடுக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

Related Stories: