விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து ரபேல் போர் விமானம் சோதனை

கொல்கத்தா: விமானம் தாங்கிய கப்பலான விக்ராந்த் கப்பலில் இருந்து ரபேல் போர் விமானம் இயக்கி சோதித்து பார்க்கப்பட்டது. பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அதில் 35 விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. தற்போது, கடற்படைக்கும் புதிய போர் விமானங்கள் வாங்கப்படுகிறது. கடலில் இருந்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி சென்று தாக்குதல் நடத்தும் ரபேல் எம். போர் விமானத்தின் சோதனை  ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் நேற்று நடந்தது. 40,000 டன் எடை கொண்ட விக்ராந்த், இந்தியாவில் கட்டப்பட்டது.  வரும் ஆகஸ்ட் மாதம் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. இதன் சோதனை ஓட்டம் அரபிக் கடல், வங்கக் கடலில்  நடந்து வருகிறது.

இந்நிலையில், விக்ராந்த் கப்பலில் ரபேல் எம்.போர் விமானத்தின் சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. இந்திய கடற்படைக்கு முதல் கட்டமாக 26 போர் விமானங்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இதில், பிரான்சின் ரபேல் எம். அல்லது அமெரிக்க தயாரிப்பான சூப்ர் ஹார்னெட் ஆகியவற்றில் ஏதாவது ஒரு நிறுவன போர் விமானத்தை கடற்படை வாங்க உள்ளது. இதற்காக சூப்பர் ஹார்னெட் போர் விமானத்தின் சோதனை அடுத்த மாதம் ஐஎன்எஸ் ஹன்சாவில் நடக்கிறது.

* பிரம்மோஸ் சோதனை

இந்திய - ரஷ்ய கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணையை, பல்வேறு வகைகளில் மேம்படுத்தி இந்தியா தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில், அந்தமான் கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

Related Stories: