வேட்பாளர்கள் கிடைக்காததால் குன்னூரில் 30 வார்டுகளில் 5 இடங்களில் மட்டுமே பாஜ போட்டி

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள 30 வார்டுகளில் போட்டியிட பாஜவில் வேட்பாளர்கள் கிடைக்காததால்  5 வார்டுகளில் மட்டுமே தற்போது போட்டியிட முடிவு செய்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர். வரும் 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை உற்சாகமாக அறிவித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 30 வார்டுகளிலும் போட்டியிட திமுக, அதிமுகவினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.  இந்நிலையில், பாஜ  தலைமை, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

ஆனால், பாஜ சார்பில் போட்டியிட போதிய வேட்பாளர்கள் இல்லாததால் பெயரளவில் 5 வார்டுகளில் மட்டுமே பாஜவினர் போட்டியிடுகின்றனர். ஜெகதளா பேரூராட்சியில் பாஜ சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ‌இல்லாமல் வருவோர், செல்வோரை பிடித்து போட்டியிட சொல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது மற்ற கட்சியினரிடையே காமெடியை ஏற்படுத்தியுள்ளது. குன்னூரில் உள்ள 30 வார்டுகளில் போட்டியிட அக்கட்சியில் போதிய ஆட்கள் இல்லாமல் 5 வார்டுகளில் மட்டுமே தற்போது போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

Related Stories: