நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விசிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விசிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விசிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இணையவழியில் வெளியிடப்பட்டது. சென்னை மாநகராட்சியில் 72, 45, 190வது வார்டுகளுக்கான விசிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

Related Stories: