டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: நாடு முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்களில் பணப்பரிமாற்றம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 2022-23ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகின்றார். அவர் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது; நாடு முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்களில் பணப்பரிமாற்றம் செயல்படுத்தப்படும். வங்கிகளுடன் இணைந்து தபால் துறை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களை வங்கிகளுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுப்பதன் மூலம் கிராமப்புற மக்கள், மூத்த குடிமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என அவர் கூறியுள்ளார்.

அதனையடுத்து பேசிய அவர், டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார். 2023-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் கீழ் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் எனவும், நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: