போர்ச்சுக்கல் பிரதமர் தேர்தல் அன்டோனியோ காஸ்டா மீண்டும் வெற்றி

லிஸ்பன்: போர்ச்சுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் அன்டோனியோ காஸ்டா தனது பதவியை தக்க வைத்துள்ளார். ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் அன்டோனியோ காஸ்டா தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. 230 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு  நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில், 41.7 சதவீத வாக்குகளை பெற்ற சோசலிஸ்ட் கட்சி 117 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. சபையில் மெஜாரிட்டிக்கு இன்னும் 4 இடங்கள் தேவை என்ற நிலையில், வெளிநாடுகளில் உள்ள 4 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. பிஎஸ்டி கட்சிக்கு 76 இடங்கள் அதிகமான இடங்களில்   கிடைத்துள்ளது. 2015ம் ஆண்டு முதல் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் அன்டோனியோ காஸ்டாவை ஆட்சி அமைக்க வரும்படி அதிபர் ரிபெல்லோ டி சோ முறைப்படி அழைப்பு விடுப்பார் என தெரிகிறது.

* மோடி வாழ்த்து

தேர்தலில் வெற்றி பெற்ற அன்டோனியோ காஸ்டோவுக்கு பிரதமர் மோடி அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில், ‘நாடாளுமன்ற தேர்தலில் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ள நண்பர் காஸ்டாவுக்கு வாழ்த்துகள். இரு நாடுகள் இடையே ஆழ்ந்த நட்புறவு மீண்டும் தொடர்ந்து நடைபெறுவதை எதிர்பார்த்து இருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: