வாலாஜாபாத் ஒன்றிய குழு கூட்டம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தின் முதல் ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் சிமென்ட் சாலை அமைப்பது, மழைநீர் கால்வாய்கள், குளங்களை சீரமைப்பது உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஒன்றிய பொது நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமல்ராஜ், ராஜ்குமார், அலுவலக மேலாளர் வேதபுரி உள்பட பலர் கலந்து கெண்டனர்.

Related Stories: