சாலையில் பிறந்தநாள் கொண்டாடியதை தட்டிக்கேட்ட தந்தை, மகனுக்கு அடி

பெரம்பூர்: அயனாவரம் பொன்வேல்புரம் 5வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (47). இவரது வீட்டின் முன் நேற்று முன்தினம் இரவு வாலிபர்கள் குடிபோதையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை சிவகுமாரின் மனைவி தட்டிக்கேட்டார். அப்போது வாலிபர்கள் அவரிடம் ஆபாசமாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட சிவகுமாரை அவர்கள் அடித்து கீழே தள்ளி கல்லால் கடுமையாக தாக்கினர். இதில் சிவகுமாரின் பின் தலையில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது. இதை கண்ட சிவகுமாரின் மகன் கவுதம் (19) அவர்களை தடுக்க வந்தபோது அவரையும் மூக்கில் தாக்கினர். அப்பகுதி மக்கள் வாலிபர்களை பிடித்து அயனாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அயனாவரம் யுவராஜ் (23), அஜித் ராஜா (23), அப்பு (22) உள்ளிட்ட 7 பேர் என தெரியவந்தது. யுவராஜின் பிறந்த நாளுக்காக கேக் வெட்டியது தெரியவந்தது. அவர்களிடம் விசாரிக்கின்றனர்.

Related Stories: