பஞ்சாபில் சூடுபிடித்த தேர்தல் பிரசாரம் சகோதரியின் வெற்றிக்கு உழைக்கும் சோனு சூட்

மோகா: மோகா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சகோதரிக்காக பாலிவுட் நடிகர் சோனு சூட் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தார். பஞ்சாப் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சச்சார் சூட், காங்கிரஸ் சார்பில் மோகா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் மத வழிபாட்டுத் தலமொன்றில் வயதான பெண்களுடன் சேர்ந்து ‘லங்காருக்கு’ சப்பாத்தி தயாரித்துக் கொடுத்தார்.

உள்ளூர் கவுன்சிலரான குர்ப்ரீத் சிங் சச்தேவா ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், ஏழைகளுக்கு லங்கார் பரிமாறினார். இதுகுறித்து மாளவிகா சச்சார் சூட் கூறுகையில், ‘கட்டமைப்பின் ஒரு பகுதியாக நான் இருந்தால், அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்’ என்றார். சில இடங்களில் தனது சகோதரியின் வெற்றிக்காக சோனு சூட்டும் பிரசாரம் செய்தார். நேற்று முன்தினம் வீடுவீடாக தனது சகோதரியுடன் பிரசாரம் செய்த சோனு சூட், குடும்பத்தினருடன் அமர்ந்து சப்பாத்தி போன்ற உணவுகளை சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: