மாணவி லாவண்யா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி பாஜக உண்ணாவிரதம்

சென்னை: தஞ்சை மாணவி லாவண்யா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, பொது செயலாளர் கருநாகராஜன், பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், ெசம்பாக்கம் வேதசுப்பிரமணியம், நடிகர் செந்தில், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: எங்களுடைய போராட்டத்தில் நிச்சயமாக அரசியல் கிடையாது. அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. எங்களுடைய போராட்டம் எந்தவித மதத்திற்கும் எதிரானது கிடையாது. எந்த  பள்ளிக்கும் எதிரானது கிடையாது. லாவண்யா இறப்பிற்கு இழப்பீடாக  மாநில அரசு  உடனடியாக அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி கொடுக்க வேண்டும். சிபிஐ விசாரணை மூலமாக விசாரித்து, அனைவரையும் கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டியது மாநில அரசின் முழு பொறுப்பு. தமிழகத்தில் கட்டாயமாக மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: