சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

அண்ணாநகர்: சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (50, பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 18ம் தேதி தனது 15 வயது மகளை காணவில்லை என நொளம்பூர் போலீசில் புகார் அளித்தார். காணாமல் போன 15 வயது சிறுமி, தி.நகரில் உள்ள தோழியின் வீட்டுக்கு வந்திருப்பதாக கடந்த 21ம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சிறுமியை மீட்டனர்.விசாரணையில், அந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (27) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, விழுப்புரத்துக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, இவ்வழக்கையும் அந்த சிறுமியையும் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இந்நிலையில், விழுப்புரத்தில் தனது வீட்டில் சக்திவேல் தங்கியிருப்பதாக திருமங்கலம் உதவி ஆணையர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நேற்று இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்ஐ ரமேஷ் தலைமையில் தனிப்படையினர் விழுப்புரம்சென்று சக்திவேலை பிடித்து சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் 15 வயது சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி விழுப்புரம் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போக்சோ பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். பின்னர் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: