ரௌடி படப்பை குணாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் போலீசாரால் தேடப்பட்டு வரும் ரௌடி படப்பை குணாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா, இவர் மீது ஆள் கடத்தல், கொலை வழக்கு போன்ற 43 வழக்குகள் இருக்கும் நிலையில் இவரை காஞ்சிபுரம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும் அவர் முறையற்ற முறையில் பணம் சம்பாதித்து வாங்கிய நிலம் மற்றும் வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. ஏற்கனவே இவருக்கு சொந்தமான 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் ஏரி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வந்தார்.

இதனை அறிந்த வருவாய் மாவட்ட  அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று இயந்திரம் மூலமாக நிலத்தை அப்புறப்படுத்தி சமநிலை படுத்தினர். நிலத்தை மீட்டதன் காரணமாக நீர்வழிப்பாதைக்கு செல்லக்கூடிய நீர் எளிதாக செல்லும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Stories: