உலகில் 34.67 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 27.65 கோடி பேர் குணம், 56.03 லட்சம் பேர் பலி

கலிஃபோர்னியா: உலகில் 34.67 கோடி பேருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. 56.03 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 27.65 கோடி பேர் குணமடைந்தனர். 6.46 கோடி பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் ஒரேநாளில் புதிதாக 778,516 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. ஒரேநாளில் 2,774 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 71,394,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 887,640 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

ஒரேநாளில் இந்தியாவில் 335,458 பேர், பிரேசிலில் 168,820, பிரான்சில் 400,851, இத்தாலியில் 179,106, இங்கிலாந்தில் 95,787 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Related Stories: