டிரோன் தாக்குதலில் பலி இந்தியர் உடல்கள் வந்தது

துபாய்: அபுதாபியில் கடந்த 17ம் தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய  டிரோன் தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் நேற்று பஞ்சாப்  கொண்டு வரப்பட்டன.இது குறித்து ஐக்கிய அரபு அமீரக இந்திய தூதர் சஞ்சய்  சுதிர் தனது டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ``ஐக்கிய அரபு அமீரகத்தில்  அவர்களின் உடல்களை இந்தியா கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்து விட்டது.

அவர்களின் உடல்கள் நாளை (நேற்று) காலை இந்தியாவுக்கு  கொண்டு வரப்படும். பஞ்சாப் மாநில அரசுடன் இணைந்து உடல்களை இந்தியா கொண்டு  வர உதவிய ஐக்கிய அரபு அமீரக அரசு, அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கு  நன்றி,’ எனக் கூறியுள்ளார். அதே நேரம், டிரோன் தாக்குதலில் பலியான இந்த 2  இந்தியர்கள் யார் என்ற விவரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Related Stories: