கடந்த 1 மணி நேரமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி..!

சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரயில் சேவை 45 நிமிடங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை - தாம்பரம் இடையே இறுமார்க்கத்திலும் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 1 மணி நேரத்திற்கும் மேல் ரயில் சேவை இல்லாததால் அலுவலக பணிக்கு சென்றவர்கள் வீடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாரிமுனை, திருவொற்றியூர், கும்மிபிடிப்பூண்டியில் அலுவலக பணிக்கு சென்றவர்கள் வீடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள் நெரிசல் அதிகரித்துள்ளதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புறநகர் ரயில்களுக்காக பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்துள்ளதால் தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது.

Related Stories: