மம்மூட்டியை தொடர்ந்து அவரது மகன் நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா

திருவனந்தபுரம்: நடிகர் மம்மூட்டியை தொடர்ந்து அவரது மகனும், நடிகருமான துல்கர் சல்மானுக்கும் கொரோனா பரவியுள்ளது. கேரளாவில் நடிகர், நடிகைகளுக்கு கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகர்கள் சுரேஷ்கோபி, அன்னா பென் உள்பட சிலருக்கும் தொற்று பரவியது. இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மும்மூட்டி ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’ 5வது பாகத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வந்தது. இதையொட்டி மும்மூட்டி திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார்.

கடந்த சில தினங்ளுக்கு முன்பு கொரோனா அவருக்கு கொரோனா பரவியது. தற்போது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இதனால் அந்த படத்தின் படப்பிடிப்பு 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது மகனும், நடிகருமான துல்கர் சல்மானுக்கும் கொரோனா பரவி உள்ளது. இந்த தகவலை சமூக இணையதளம் மூலம் அவரே வெளியிட்டுள்ளார். தனக்கு கொரோனா பாதித்து உள்ளது. வீட்டில் சுய தனிமையில் இருக்கிறேன். லேசான காயச்சல் தவிர வேறு பிரச்னைகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: