சூரியா எஸ்டேட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை உரிய ஆவணங்களுடன் வந்து பெறலாம்: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

சென்னை: சென்னை, தி.நகரில் இயங்கி வந்த சூரியா எஸ்டேட் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து முதலீட்டை பெற்று முதிர்வு அடைந்த பின்னரும் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பத் தராததால், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் காவல் துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை, பொருளாதரக் குற்றப்பிரிவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு தொகையை திரும்ப வழங்கி வருகிறது. இதுவரை தங்களது முதலீட்டு தொகையை திரும்ப பெற தங்களது உரிய அசல் ஆவணங்களுடன் (முதலீட்டுப் பத்திரம், அடையாள மற்றும் விலாச சான்றுகள்), சென்னை-83, அசோக் நகர், காவல் பயிற்சி கல்லூரி, பொருளாதார குற்றப்பிரிவு-II, காவல் ஆய்வாளரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: