5-ஜி செல்போன் சேவையால் அச்சம் அமெரிக்காவுக்கு பல்வேறு நாட்டு விமானங்கள் ரத்து

நியூயார்க்: விரைவான சேவை மற்றும் அதிக கவரேஜ் போன்றவற்றுக்காக 5 ஜி ஸ்மார்ட் போன்கள் அமெரிக்காவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த வகை ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிவரும் சிக்னல்கள் விமானங்களின் திசை காட்டும் கருவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும். ஓடுதளத்தில்  தரையிறங்கும் போது விமானங்களின் பிரேக்கை செயலிழக்க செய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும்   ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   

ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘5 ஜி செல்போன் சேவையால் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு இன்று (நேற்று) அட்டவணைப்படி விமானங்களை இயக்க முடியவில்லை. ஆனால், டெல்லியில் இருந்து வாஷிங்டன் செல்லும் விமானம் வழக்கம்போல் இயக்கப்படும். எமிரேட்ஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவின் பாஸ்டன், சிகாகோ, டல்லாஸ் போர்ட் ஒர்த், ஹூஸ்டன்,மியாமி,நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை இன்றில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே,  தொலை தொடர்பு நிறுவனங்கள்,செல்போன் கோபுர டவர்களில் 5 ஜி சேவை  தொடங்குவதை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளன.

Related Stories: