முதியவர் மீது தாக்குதல்... சிறுவனிடம் விசாரணை

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் மன்மதன்(60). காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பாடி ரிக்‌ஷா ஓட்டி வருகிறார். நேற்று திருவொற்றியூர் ஒண்டிகுப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் வழிமறித்து அவரிடம் திடீரென சண்டைபோட்டு உருட்டுக்கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினான்.

தகவலறிந்த காசிமேடு போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அதே பகுதியில் பதுங்கியிருந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். அதில் சிறுவனிடம் மன்மதன் ₹600ஐ வாங்கி கொண்டு திருப்பி தராததால் ஆத்திரத்தில் அவரை தாக்கியது தெரியவந்தது.

Related Stories: