உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் அதிக இடங்கள் கேட்போம்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

திருச்சி: திருச்சியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: அதிமுக கூட்டணியில் பாஜ உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடங்கள் ஒதுக்கீடு குறித்த கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் துவங்கவில்லை. இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு பாஜகவுக்கு உள்ளதால் அதிக இடங்களை கேட்டு பெறுவோம்.நீட் தேர்வை பாஜ தான் கொண்டு வந்தது என்று கூற முடியாது.

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழகத்துக்கு தேவைக்கும் அதிகளவில் மருந்துகளை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். அவற்றை இந்த அரசு சரியாக பயன்படுத்தி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories: