நிபுணர் குழு மூலமே குடியரசு நாள் அணிவகுப்புக்கான அலங்கார ஊர்தி தேர்வு நடைபெறுகிறது!: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் கடிதம்..!!

டெல்லி: நிபுணர் குழு மூலமே குடியரசு நாள் அணிவகுப்புக்கான அலங்கார ஊர்தி தேர்வு நடைபெறுகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அலங்கார ஊர்தி நிராகரிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த ஆண்டு தமிழ்நாடு உள்பட 29 மாநிலங்களில் இருந்து அலங்கார ஊர்திக்கான முன்வடிவு பெறப்பட்டது. தமிழ்நாடு அரசின் முன்வடிவு முதல் 3 சுற்றுகள் பரிசீலனையில் இருந்தது. 3 சுற்றுகள் முடிவில் இறுதி செய்யப்பட்ட 12 அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெறவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு ராஜ்நாத் சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: