புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 31 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 31 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1-9ஆம் வகுப்புகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் 10,11,12ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தினசரி கொரோனா தொற்று 2,000தை தாண்டிய நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக,1-9 ஆம் வகுப்புகள் வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 10,11,12 ஆம் வகுப்புகளுக்கும் மற்றும் கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை வழங்குவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: