மருத்துவமனையில் கமல் அட்மிட்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று பகல் கமல்ஹாசன் சேர்க்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி கமல்ஹாசன் தரப்பில் கூறும்போது, ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உடல் நலத்துடன் இருக்கிறார்’ என்றனர்.

Related Stories: