தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் நாளை நேர்காணல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், திருத்தணி ஆகிய நகராட்சிகள் மற்றும் பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பேரூராட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுகவினரிடம், எனது தலைமையில் எம்எல்ஏக்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில்  நேர்காணல் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி, திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள என்.எஸ்.கே. டவரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நாளை (19ம் தேதி) நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு பள்ளிப்பட்டு பேரூராட்சி, காலை 10.30 மணிக்கு பொதட்டூர்பேட்டை பேரூராட்சி, மதியம் 12 மணிக்கு திருத்தணி நகராட்சி, மாலை 4 மணிக்கு திருவள்ளூர் நகராட்சிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி கழக செயலாளர்கள் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் முறையாக தகவல் தெரிவித்து நேர்காணலில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: