எல்லையில் கை வைத்தால் விட மாட்டோம் : ராணுவ தளபதி எச்சரிக்கை

புதுடெல்லி : நாடு விடுதலை பெற்ற பிறகு, 1949ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி  இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக கே.எம்.கரியப்பா  பதவியேற்றார். இதையொட்டி ஆண்டுதோறும் ஜன.15ம் தேதி ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் கரியப்பா மைதானத்தில் நேற்று ராணுவ அணிவகுப்பு நடந்தது. இதில், ராணுவ தளபதி நரவானே பேசியதாவது: சியாச்சின் பனி படர்ந்த உயரமான மலை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்கள்  விழிப்புடன் எல்லையை கண்காணித்து வருகின்றனர்.  

அவர்களை சோதித்து பார்க்கும் தவறான முடிவை யாரும் எடுத்து விடக்கூடாது. எல்லையில் தற்போது உள்ள நிலைமையை தன்னிச்சையாக மாற்ற யாரையும் அனுமதிக்க மாட்டோம். கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் சீனாவால் ஏற்பட்ட பிரச்னையால் ராணுவத்துக்கு கடுமையான சவால்கள் ஏற்பட்டன. இந்தியாவுக்குள் ஊடுருவதற்கு எல்லையில் 300 முதல் 400 தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 194 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு  அவர் பேசினார்.

புதிய ராணுவ சீருடை

ராணுவத்தினருக்கான புதிய போர் சீருடையை தேசிய ஆயத்தை ஆடை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து ராணுவம் உருவாக்கியுள்ளது. புதிய சீருடை மஞ்சள் மண் நிறம், பச்சை மற்றும் ஆலிவ் நிறங்களை கொண்டுள்ளது. டெல்லி கரியப்பா ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நேற்று வீரர்களின் அணிவகுப்பு  நடந்தது. அப்போது பாரசூட் படை பிரிவினர் புதிய சீருடையுடன் அணி வகுத்து சென்றனர்.

Related Stories: