போதை வழக்கில் கைதான ராகினி திவேதி மீண்டும் தமிழில் நடிக்கிறார்

சென்னை : போதை வழக்கில் சிறை சென்று திரும்பிய நடிகை ராகினி திவேதி, மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். கன்னட நடிகை ராகினி திவேதி, தொடர்ந்து இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை மருந்து கடத்தல், அதைப் பயன்படுத்துதல் ஆகிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 4 மாதங்கள் பெங்களூரு சிறையில் இருந்த அவர், தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. சிறையில் இருந்து விடுதலையான ராகினி திவேதி, தற்போது ஒரு கன்னடப் படத்தில் நடிக்கிறார். இதையடுத்து தமிழில் ‘ஒன் 2 ஒன்’ என்ற படத்தில் சுந்தர்.சி ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை கே.திருஞானம் இயக்குகிறார். இதற்கு முன்பு தமிழில் வெளியான ‘அறியான்’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களில் ராகினி திவேதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: