பணகுடி அருகே பொங்கல் விளையாட்டு போட்டி 129 கிலோ இளவட்டக்கல் தூக்கிய இளைஞர்

*65 கிலோ தூக்கி அசத்திய பெண்

பணகுடி, : பணகுடி அருகே நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் 129 கிலோ இளவட்டக்கல்லை இளைஞர் தூக்கினார். 65 கிலோ இளவட்டக்கல்லை தூக்கி பெண்கள் அசத்தினர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. வடலிவிளையை சேர்ந்த ஆண்களுக்கு இணையாக பெண்கள் மற்றும் சிறுவர்களும் கலந்து கொண்டு தங்களது உடல் வலிமையை வெளிப்படுத்தினர்.

50 கிலோ கொண்ட  உரலை ஒரு கையில் அதிக நேரம் பிடித்துக் கொண்டிருந்த அஜய் என்ற இளைஞர் முதல் பரிசும், பாலகிருஷ்ணன் 2ம் பரிசும் பெற்றனர். 65 கிலோ கொண்ட இளவட்ட கல்லை தூக்கி  10 முறை கழுத்தை சுற்றி அனைவரையும் வியப்பூட்டிய ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு முதல் பரிசும், 4 முறை சுற்றிய பத்மாவுக்கு 2ம் பரிசும் கிடைத்தது. 129 கிலோ எடையிலான இளவட்டக்கல்லை தூக்கி தங்கராஜ் முதல் பரிசை தட்டி சென்றார்.

Related Stories: