இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்: வேதாரண்யம் மீனவர்களை தாக்கி வலைகள் பறிப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் மீனவர்களை தாக்கி வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் மீனவர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், நேற்றுமுன்தினம் மாலை 50 பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் புஷ்பவனத்தை சேர்ந்த 4 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நள்ளிரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு 4 படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர் 10பேர், படகை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களை தாக்கியதோடு 400 கிலோ மீன்பிடி வலை, 2 செல்போன், ஐஸ்பாக்ஸ் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இதேபோல் மற்றொரு படகில் சென்ற ஜெயபால், தங்கத்துரை, மலைகேம் ஆகிய 3 பேரை கோடியக்கரைக்கு தென்கிழக்கே நள்ளிரவில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி 150 கிலோ மீன்பிடி வலைகளை பறித்து சென்றனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் படையினரிடம் மீனவர்கள் புகார் செய்தனர். அவர்கள்  வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் நீட்டிப்பு :  ராமேஸ் வரத்தில் இருந்து கடந்த டிச.18ம் தேதி பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்கச் சென்ற 43 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களின் காவலை 27ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: