திருப்பதியில் 5 நாட்கள் நடைபெற்ற தேசிய பெண்கள் கபடி போட்டியில் இமாச்சல பிரதேச அணி வெற்றி-கோப்பையை கைப்பற்றியது

திருமலை : திருப்பதியில் 5 நாட்களாக நடந்த தேசிய கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் தேஸ்வால் அணியும், பெண்கள் பிரிவில் இமாச்சல பிரதேச அணியும் வெற்றி பெற்று கோப்பைபை கைப்பற்றியது.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி மாநகராட்சி சார்பில் 75வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய அளவில் கபடி போட்டி இந்திரா மைதானத்தில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 22 மாநிலங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இறுதி போட்டிகள் நடைபெற்றது. அதில், ஆண்கள் பிரிவில் ஹரியானா- தேஸ்வால் கபடி அகாடமியும் மோதின. இதில், தேஷ்வால் அகாடமி 69-29 என்ற புள்ளிக்கணக்கில் 40 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  பெண்கள் பிரிவில் சஹஸ்ர சீமா பால்- இமாச்சல பிரதேச  அணியும் மோதின. இதில், இமாச்சல பிரதேச அணி 40-24 என்ற புள்ளிக்கணக்கில் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் சஹஸ்ர சீமா பால் அணியை வீழ்த்தியது. இறுதி போட்டியில் வெற்றி பெற்ற இரு அணிகளும் கோப்பைகளை கைப்பற்றின.

இந்த வெற்றி கோப்பைகளை மாநில துணை முதல்வர் நாராயணசாமி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சத்யநாராயணா, திருப்பதி எம்எல்ஏ கருணாகரன், மேயர் சிரிஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இணைந்து வழங்கினர். தொடர்ந்து, சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ₹5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. மேலும், வீரர்களை பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories: