திருப்பதி அலிபிரியில் ஆசிரியர் வீட்டில் ₹10 லட்சம் தங்க நகைகள், பணம் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

திருப்பதி : திருப்பதி அலிபிரியில் உள்ள ஆசிரியர் வீட்டில் ₹10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி அலிபிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பாரெட்டி நகரை சேர்ந்தவர் வரப்பிரசாத்(35). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மேல்மாடியில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது, நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் வீடு புகுந்துள்ளனர். பின்னர், பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றனர். இவர் வழக்கம்போல் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ள கிளம்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வரப்பிரசாத் திருப்பதி அலிபிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழித்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிந்து ₹10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆசிரியர் வீட்டில் ₹10 மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: