ஜன.17ம் தேதி உத்தமபாளையத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி: சேவல் உயிரிழக்கும் வகையில் சண்டை நடத்த கூடாது என ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

மதுரை: தேனி உத்தமபாளையத்தில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தங்கமுத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்; பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 16ம் தேதி சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி அனைத்து விதமான முன்னேற்பாடுகளுடன் சண்டை நடத்தப்படும். ஜன.16ம் தேதி சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி மனு அளித்தோம்.

நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே சேவல் சண்டை நடத்த அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். எனவே தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 16ம் தேதி சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அனால் ஜன.16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் ஜன.17-ம் தேதி சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

சேவல் சண்டையில் போது சேவலின் காலில் பிளேடு, கத்திய கட்டக்கூடாது. சண்டைக்கு விடப்படும் 2 சேவல்களும் உயிருடன் இருக்க வேண்டும். ஒரு சேவல் கூட உயிரிழக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: