தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 1-ல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 1-ல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வங்ககடலில் உருவனா காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து சற்று இதமான சூழல் நிலவியது. இதனை அடுத்து வங்ககடலில் உருவனா காற்றழுத்த தாழ்வு நிலை ரீமால் புயலாக வலுப்பெற்று வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையேகரையை கடந்தது.

இதனை அடுத்து தமிழ்நாடு, புதுச்சேரியில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் ஜூன் 1-ம் தேதி தமிழகம் புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 1-ல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கர்நாக மாநிலத்திலும் ஜூன் 1-ம் தேதி முதல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 1-ல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: