சிட்னி: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில், முதல் 3 டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில் 4வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 416 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 137, ஸ்டீவன் ஸ்மித் 67 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டுவர்ட் பிராட் 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்திருந்தது.