தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக ஆப்கான் ராணுவத்தில் மனித வெடிகுண்டு படை: உலகில் முதல் முறையாக தலிபான்கள் அதிரடி

காபூல்: ‘ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு போட்டியாக புதிதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் உருவெடுத்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதில் இருந்து, ஐஎஸ் அமைப்பினர் இதுவரை  5 தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இதில், பெரும்பாலானவை மனித வெடிகுண்டு தாக்குதல்கள். இதையடுத்து, நாட்டின் பாதுகாப்பிற்காகவும், எல்லைகளை பாதுகாக்கவும்,  ராணுவத்தை பலப்படுத்துவதற்கும் ராணுவத்தில்  தலிபான் அமைப்பை சேர்ந்த ஒரு லட்சம் வீரர்கள் சேர்க்கப்படுவார்கள். இதில், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் தற்கொலை படைப்பிரிவும் உருவாக்கப்படும்,’ என தலிபான்களின் தலைமை தளபதி காரி பசீயுதீன் கூறியதாக, அல் ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

உலகளவில் எந்த நாட்டின் ராணுவத்திலும் மனித வெடிகுண்டு படைப்பிரிவு கிடையாது. தலிபான்கள் ஆட்சியை பிடித்திருப்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தனது நாட்டு ராணுவத்தில் மனித வெடிகுண்டு பிரிவை தலிபான்கள் உருவாக்குவது ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது.  

*எல்லை பகுதியில் வேலி; பாக்.கிற்கு எச்சரிக்கை: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையிலான  எல்லை 2,670 கிமீ நீளமுடையது. 100 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட இந்த  எல்லைக்கோடு தொடர்பாக, இருநாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. இந்நிலையில், தூரந்த் எல்லையில் பாகிஸ்தான் வேலி அமைப்பதற்கு தலிபான்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையும் மீறி வேலி அமைத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

Related Stories: