மெட்ரோ ரயில் சேவை வண்டலூர் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மெட்ரோ ரயில் சேவையை விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று 2-ம் நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று முதல் சட்டப்பேரவையில் கேள்வி - பதில் நேரம் நேரலை செய்யப்படும் என தெரிவித்து இருந்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக கேள்வி நேரம் மக்களுக்காக நேரடியாக  இன்று ஒளிபரப்பப்பட்டது. அப்போது முதலாவதாக பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி, மெட்ரோ ரயில் சேவை விமான நிலையத்திலிருந்து வண்டலூர் வரை நீட்டிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ ரயில் சேவையை விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ஆய்வில் உள்ளது என அவர் பதில் அளித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளுக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் பதில் அளித்தனர். ஓட்டப்பிடாரத்தில் அரசு கல்லூரி அமைக்க உறுப்பினர் சண்முகையா கோரிக்கை வைத்தார் அதற்க்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, ஓட்டப்பிடாரத்தில் அரசு உதவி பெரும் கல்லூரி, தனியார் கல்லூரிகள் உள்ளன என தெரிவித்தார்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் விரைவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுமா என உறுப்பினர் அண்ணாதுரை கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, புதிதாக உருவாக்கப்பட்ட 25 நகராட்சிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: